உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 1 இலட்சம் மரங்கள் நடவு

உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 1 இலட்சம் மரங்கள் நடவு

மண் அழிந்தால் உயிர் அழியும்; உலக மண் தினத்தில் சத்குரு அறிவுறுத்தல்உலக மண் தினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் மூலமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 'மண்ணிலிருந்தே பிறந்தோம். மரணத்தின் போதும் மண்ணால் தழுவப்படுகிறோம். மண் அழிந்தால் உயிர்கள் அழியும்' என்று உலக மண் தினத்தை முன்னிட்டு சத்குரு தனது X தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 'இந்த மண் அனைத்து உயிர்களின் வடிவங்களையும் தாண்டி, தொடர்ந்து இந்த சுழற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மண் ஒரு விற்பனை பொருளல்ல. இந்த கிரகத்தில் உள்ள உயிர்களின் மூலம் அது. நம்மை விட அது பழமையானது, ஞானம் நிறைந்தது, நம்மை காட்டிலும் பல மடங்கு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தது - மனிதரை காட்டிலும் மிகப்பெரிய செயல்முறையாக இருக்கிறது. நாம் அதிலிருந்தே பிறந்தோம், நம் மரணத்தின் போதும் மண்ணால் தழுவப்படுகிறோம். மண் அழிந்தால் உயிர் அழியும்' என தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் உலக மண் தினம் டிசம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக உலக மண் தினத்தில் 364 ஏக்கர் பரப்பளவில், 1 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 33 மாவட்டங்களில் உள்ள, 51 விவசாய நிலங்களில், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களால் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்வளத்தை பாதுகாப்பதில் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் மண்காப்போம் இயக்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதாகும், இதன் மூலம் நதி நீர் மீட்டெடுப்பு, விவசாயிகளின் வருவாய் அதிகரித்தல், மண்வள மேம்பாடு போன்ற பயன்கள் விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. மேலும் மண்வளப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஈஷா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு அஜர்பைஜானில் ஐக்கிய நாடுகள் சபையால் (UNFCCC) நடத்தப்பட்ட COP29 சர்வதேச மாநாட்டில் சத்குரு அவர்களும், ஈஷா பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அம்மாநாட்டில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் எதிர்கொள்ள எரிசக்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மண்வள பாதுகாப்பிற்கும் கொடுக்கவேண்டும் என்றும், விவசாய நிலங்களின் மண்ணை மீட்டெடுப்பது காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதில் ஒரு முக்கியமான அம்சம் என்றும் சத்குரு எடுத்துரைத்துள்ளார். ஈஷா இதுவரை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய 12 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 85 லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக தமிழகம் மற்றும் கார்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு ஈஷா திட்டமிட்டுள்ளது.இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நர்சரிகளில் டிம்பர மரக்கன்றுகள் வெறும் ரூ.3 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை