உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., விசாரணை

ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., விசாரணை

கோவை: கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ், 69. இவருக்கு, கீதா, 42, லதா,39 ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும், 2011ம் ஆண்டு முதல், பிரம்மச்சரியம் பெற்று, தங்களது பெயர்களை, மாமயூ மற்றும் மாமதி என பெயர் மாற்றம் செய்து, ஈஷா யோகா மையத்திலேயே வசிக்கின்றனர். இந்நிலையில், காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'என் மகள்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கோவை மாவட்ட போலீசார் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, கோவை எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையிலான குழுவினர், நேற்று காலை 10:45 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு வந்தனர்.அங்கு தங்கியுள்ள, பெண் பிரம்மச்சாரிகளிடமும், தன்னார்வலர்களிடமும், இரவு 7:45 மணி வரை, விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
அக் 02, 2024 20:01

ஈஷா யோகமையம் ...... திராவிட பதர்கள் அங்கே நிலம் வாங்கிக்குவிக்க முடியலை ..... பெருங்கூட்டம் அங்கே யோகமையத்தில் சேர்கிறது .......... ஹிந்து மதத்தால் பயனில்லை என்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ..... மதமாற்றத்துக்கு குறுக்கே நிற்கிறது ...... ஆகவே அவ்வப்பொழுது வழக்கு, விசாரணை என்று குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்போம் .......


GoK
அக் 02, 2024 17:27

மத மாற்றம் ஒரு ஈன செயல், குறையில்லாத மனிதனுமில்லை, மதமுமில்லை. தன்னைப்புரிந்து கொண்ட எந்த மதமும் தேவை இல்லை.


S. Gopalakrishnan
அக் 02, 2024 15:22

காலை பத்தே முக்கால் மணி முதல் மாலை ஏழே முக்கால் மணி வரை ஒன்பது மணி நேரம் விசாரிக்கும்படி இது இவ்வளவு பெரிய வழக்கா ?


karthik
அக் 02, 2024 08:47

அந்த காமராஜ் ஒரு கிரிப்டோ கிரிஸ்துவர்.... அவர் தன் மகளுடன் 8 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தார் ... சில வருடமாக திடீரென அவர் சார்ந்த மத அமைப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டு இடையூறு செய்கிறார். 40 வயது நன்கு படித்த ஒரு பெண் தன்னுடைய விருப்பத்தின் பேரில் துறவறம் பெற்றுக்கொள்வது அவர் உரிமை. இந்த காலாச்சாரத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயம் ஈஷா மட்டும் இல்லை என்றால் கோவை வடவள்ளி ஆலந்துறை தொண்டாமுத்தூர் அதன் சுற்று பகுதிகள் என்றோ காருண்ய மூலம் கிறித்துவ மயம் ஆக்க்கப்பட்டிருக்கும்.


புதிய வீடியோ