உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணை வழங்கல்

மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணை வழங்கல்

போத்தனுார்: மத்திய அரசு சார்பில், 17வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி, நேற்று கோவை கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் தலைமை வகித்து பேசுகையில், நாடு முழுவதும், 40 இடங்களில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இம்முயற்சி இந்திய அரசால், இந்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான, திட்டமிட்ட தொழில்நுட்பம் சார்ந்த ஆள் சேர்ப்பிள் வெற்றியை குறிக்கிறது. இளம் இந்தியர்கள் தேசத்திற்கு சேவை செய்யவும், 'விக் ஷித் பாரத் 2047-ன்' கனவுகளை நன வாக்குவதற்கும் வாய்ப்பை வழங்குகிறது. பணியில் சேர்ந்தவர்கள் நேர்மை, இரக்கம், அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், என்றார். தொடர்ந்து பிரதமரின் பேச்சுக்கு பின், தபால் துறை, உள்துறை அமைச்சகம், வங்கி மற்றும் ரயில்வே துறைகளில், 51 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி