ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஐ.டி. ஊழியர் கைது
கோவை; பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர் சொந்தமாக ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவரது நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த அருண்குமார், 35 என்பவர் கடந்த, 2022ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். அந்தப் பெண் அருண்குமார், திருமணம் செய்வதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைபடங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்துள்ளார். பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். கடந்த, 2023ம் ஆண்டு அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமீனில் வெளியே வந்த அருண்குமார் பெண்ணின் மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைபடங்களை அனுப்பி பணம்பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அருண்குமாரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.