குடிநீர் வந்து 25 நாள் ஆச்சு;மக்கள் தவிப்பு
அன்னுார், ; அன்னுார் அருகே அவிநாசியிலிருந்து, மேட்டுப்பாளையம் வரை சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மரங்களை வெட்டி அகற்றுவதாலும், குழி தோண்டி சாலை அமைப்பதாலும் குழாய்கள் உடைந்துள்ளன.இந்தக் குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த 25 நாட்களாக அவிநாசி சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி, சி.எஸ்.ஆர். நகர், நாகமாபுதூர் மற்றும் சோமனுார் பிரிவு வரை சாலையின் தெற்கு பகுதியில் 25 நாட்களாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.