உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படிப்புக்கு ஜே! பாதியில் விட்ட மாணவர்கள் கைகளில் மீண்டும் புத்தகம்

படிப்புக்கு ஜே! பாதியில் விட்ட மாணவர்கள் கைகளில் மீண்டும் புத்தகம்

கோவை: கோவை மாவட்ட அரசு பள்ளிகளில், படிப்பை இடையில் கைவிடும் மாணவர்களின் விகிதம், கடந்த ஆண்டைவிட, நடப்பு கல்வியாண்டில் குறைந்துள்ளது.கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் முயற்சியாக, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.இதன் விளைவாக, அந்தப் பகுதிகளில் இடைநிற்றல் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளதாகவும், 80 சதவீதம் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளனர் எனவும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தின் அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பற்றிய விவரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெறுகிறது.தற்போது 80 சதவீத விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தனியார் பள்ளிகளிலிருந்து, ஆங்கில வழி அரசு பள்ளிகளுக்கு, சேர்க்கை பெறும் மாணவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது.சேர்க்கை பெற்ற மாணவர்களில் 10 சதவீத மாணவர்களுக்கான ஆதார் எண், முகவரி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களால் வழங்கப்படாததால், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் உள்ளது.இதனால், மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களும் கிடைக்க தாமதமாகிறது. எனினும், பள்ளி இடைநிற்றலை மேலும் குறைக்கும் நோக்கில், மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை