உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாக்டோ - ஜியோ மறியல்  பிரசாரம்; பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிரம்

ஜாக்டோ - ஜியோ மறியல்  பிரசாரம்; பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிரம்

கோவை; பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெறும் மறியல் போராட்டத்துக்கான பிரசாரத்தை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அடங்கிய 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கோவை மாவட்ட, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்திற்கான பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட, 24 பள்ளிகளில் முதற்கட்டமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநில துணைத்தலைவர் அருளானந்தம், மாவட்டத் தலைவர் சரவணக்குமார் உள்ளிட்டோர், வரும், 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடக்கும் மறியல் போராட்டத்தில், திரளாக பங்கேற்குமாறு, ஆசிரியர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ