மாநில சிலம்பப் போட்டியில் ஜே.சி.டி. மாணவர்கள் சாதனை
கோவை: கன்னியாகுமாரியில் உள்ள சி.எஸ்.ஐ. அரங்கில் நடந்த 23வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், பிச்சனுார் ஜே.சி.டி. கல்வி நிறுவனத்தை சேர்ந்த 7 மாணவர்கள் மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார், நெடுங்கம்பு வீச்சில் தங்கமும், வேல்கம்பு வீச்சில் வெள்ளியும் வென்றார். முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீமதி, கம்பு சண்டையில் தங்கமும், ஒற்றை வாள் வீச்சில் வெண்கலமும் வென்றார். மூன்றாம் ஆண்டு மாணவர் கோகுல்ராஜ், வேல்கம்பு வீச்சிலும், ஒற்றை சுருள் வாள் வீச்சிலும் தங்கம் வென்றார். முதலாம் ஆண்டு மாணவர் குகனேஷ், கம்பு சண்டையில் தங்கமும், ஒற்றை வாள் வீச்சில் வெள்ளியும் பெற்றார். முதலாம் ஆண்டு மாணவர் சிவயோகேஷ், நெடுங்கம்பு வீச்சிலும், கம்பு சண்டையிலும் வெள்ளி வென்றார். முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திகேயன், கம்பு சண்டையில் வெள்ளியும், நெடுங்கம்பு வீச்சில் வெண்கலமும் வென்றார். முதலாம் ஆண்டு மாணவி லாவண்யா, கம்பு சண்டையில் தங்கமும், நெடுங்கம்பு வீச்சில் வெள்ளியும் பெற்றார். இதன் மூலம் ஜே.சி.டி. கல்வி நிறுவன மாணவர்கள் 6 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஜே.சி.டி. கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், இயக்குநர்கள், முதல்வர்கள் வாழ்த்தினர்.