நகைக்கடை உரிமையாளரிடம் 9.30 லட்சம் ரூபாய் மோசடி
கோவை: பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45; தனது சகோதரனுடன் இணைந்து தங்க நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த, ஜன.,21ம் தேதி இவரது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்டிருந்த, 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்து அவர் ஆதார் கார்டு, பான் கார்டு விவரங்களை பதிவு செய்தார். பதிவு செய்த சில நிமிடங்களில், அவரின் கணக்கில் இருந்து ரூ. 9.38 லட்சம் மாயமானது. மணிகண்டன், 1930 எண்ணுக்கு அழைத்து புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.