மேலும் செய்திகள்
பஸ் கண்டக்டரிடம் பிரச்னை மாணவர்கள் சாலை மறியல்
17-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பஸ்சில் தவற விட்ட நகை மற்றும் பணத்தை உரியவரிடம், பஸ் டிரைவர், கண்டக்டர் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி - வாளவாடி (வழித்தட எண், 41பி) என்ற அரசு பஸ்சில், நேற்று முன்தினம் பேக் ஒன்று கிடந்தது. இதை கண்ட பஸ் டிரைவர் அருள்கணேஷ், கண்டக்டர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கண்டறிந்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த பேக்கில் இருந்த அடையாளங்களை கண்டறிந்து உரிமையாளரான கோலார்பட்டி காயத்ரி, 21, என்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., இளங்கோ தலைமையில், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஒரு சவரன் செயின், 3,500 ரூபாய் பணத்தையும் போலீசார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். டிரைவர், கண்டக்டர் செயலுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
17-Jul-2025