உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு

 ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு

கோவை: மாவட்டத்தில் அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர் குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் லேப் டெக்னீசியன், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், மாவட்ட திட்ட மேலாளர், ஆர்.எம்.என்.சி.எச்.+ஏ. ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், நகர்ப்புற சுகாதார செவிலியர், ஏ.என்.எம்., கிளீனர் உள்ளிட்ட 85 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செப்.15ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ