உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுக்க கூட்டு தேடுதல் வேட்டை

கோவை:மாவோயிஸ்ட் இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள வனப்பகுதிகளில், கூட்டுப்படையின் மூன்று நாள் தேடுதல் வேட்டை நடந்தது.இதுதொடர்பாக, ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சந்திப்பு வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தை தடுக்க, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவில், 'ஆப்பரேஷன் சேப் பாரஸ்ட்' என்ற பெயரில் ஏப்., 7 முதல் 9 வரை மூன்று மாநில படைகளின் கூட்டு வன தேடுதல் வேட்டை, வயநாடு, சாம்ராஜ்நகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடந்தது. இதில், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது. மேலும், உளவுத்துறை தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சந்தேகப்படும்படியான மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ