உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், இன்று கந்த சஷ்டி துவங்குகிறது. வரும், 27 ம்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது. கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, இன்று காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. தினமும், காலை, 9:15 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், 11:00 மணிக்கு, அபிஷேகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. வரும், அக்., 27 ம்தேதி மாலை, 4:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 7:05 மணிக்கு, சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. 28 ம்தேதி காலை, 9:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி