உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாநில அளவில் முதலிடம்

கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாநில அளவில் முதலிடம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 மாணவர்கள் தேர்வு எழுதி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.பள்ளி மாணவர் கார்த்திக், 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி ஸ்ரேயா, 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்; மாணவி சர்மதா 495 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். நித்தின் விஜய் மற்றும் கவிதா இருவரும் 493 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கனிஷ்கா ஸ்ரீ 490 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், 100 மதிப்பெண் பெற்றனர். அதேபோன்று, அறிவியலில், 14 பேர்; சமூக அறிவியலில், 14 பேர் 100 மதிப்பெண் பெற்றனர்.முதல் 5 இடம் பிடித்த மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் சண்முகம், செயலாளர் உமாமகேஸ்வரி, ஆலோசகர் ரவிச்சந்திரன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.முதலிடம் பிடித்த கார்த்திக் கூறுகையில், ''மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. படிக்கும் போதும், தேர்வு காலத்திலும், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஊக்கமளித்தனர். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதை லட்சியமாக கொண்டுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை