உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! தினமலர் பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்

குரலில் கணீர் ... கருத்துக்களில் சுளீர்! தினமலர் பேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்

கோவை: 'தினமலர்' நாளிதழ் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கணீர் குரலாலும், புதிய கருத்துக்களாலும், மாணவர்கள் அசத்தினர்.'தினமலர்' நாளிதழ், இந்திய நீர்ப்பணிகள் சங்கம், 'எய்ம்' தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நேற்று நடந்தது.அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள், 'நீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் என்னுடைய நவீன சிந்தனைகள்' மற்றும் 'நீர் மற்றும் சுற்றுசூழல் மேலாண்மையில் நம்முடைய பங்கு' ஆகிய இரு தலைப்புகளில், வார்த்தைகளால் விளையாடினர்.போட்டிகள், குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, ஈச்சனாரி, ரத்தினம் கல்லுாரி, பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பொள்ளாச்சி, பி.ஏ., கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தன.180 மாணவர்கள் பங்கேற்றனர். காலை 10:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. போட்டிக்கான முடிவுகள் ஒரு வாரகாலத்துக்குள் அறிவிக்கப்பட உள்ளன.எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, ரூ.7,000, இரண்டாம் பரிசாக, ரூ.5,000, மூன்றாம் பரிசாக, ரூ.3,000 வழங்கப்படும். பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 மாணவர்களுக்கான பிரிவில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ரூ.7,500, மூன்றாம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படும்.வரும், பிப்., 1ம் தேதி பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குனியமுத்துார், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி கருத்தரங்கக்கூடத்தில் நடக்க உள்ளது.

மாணவர்கள் சொல்வதென்ன?

ரித்திஷா, கொங்கு வேளாளர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி, கருமத்தம்பட்டி: பேச்சுப்போட்டி மிகச்சிறப்பாக இருந்தது. சுற்றுச்சூழல் குறித்த தலைப்பில் பேச பல்வேறு தகவல்களை திரட்டிய போது, பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு பலரும் பேசிய கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது.சாகித்யா, சமஸ்காரா அகாடமி, ஒண்டிபுதுார்: இன்று பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என,பேசினாலும், அதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதை அழிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து, தெரிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது. இதுபோல் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வேண்டும்.கெத்சீயாள், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்: மொபைல்போன் சூடாவது குறித்து கவலைப்படும் மக்கள், பூமி வெப்பமாவது குறித்து வருத்தப்படுவதில்லை. கழிவுகளை அகற்ற தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து, தகவல்கள் திரட்டியது பயனுள்ளதாக இருந்தது.தமிழரசன், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையாம்பாளையம்: இன்று பயிர்களுக்கு உரப்பயன்பாடு அதிகமாக உள்ளது. இதை அறியாமல், தொடர்ந்து அதை பயன்படுத்துவதால், இன்று பல்வேறு நோய்கள் நம்மை தாக்குகின்றன. இதை மாற்றி, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ