உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரில் இளம்பெண் கடத்தலா?

காரில் இளம்பெண் கடத்தலா?

கோவை: காரில் இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர்கள், கோவை இருகூர் பகுதியில் காரில் இளம்பெண்ணை கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதி முழுவதும் தேடினர். நடந்து சென்ற இளம்பெண்ணை, அவ்வழியாக வெள்ளை நிற காரில் வந்த ஒரு வர் தாக்கி கடத்தி சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ