உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆண்டு விழாவில் அசத்திய மழலையர்

 ஆண்டு விழாவில் அசத்திய மழலையர்

கோவை: நேஷனல் மாடல் கிண்டர் சோன் பள்ளியின் பீளமேடு, ஆர்.எஸ்.புரம் மற்றும் காந்திமாநகர் கிளைகளில் பயிலும் மழலையர் பள்ளி மாணவர்களின் ஆண்டு விழா, 'தி சம்மர் ஷோ' என்ற பெயரில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 'ஷி பேக்கரி', 'பேக் கார்ட்' நிறுவனங்களை நடத்தி வரும் தொழில்முனைவோர் இந்து விகாசினி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை கவர்ந்தனர். சிறார்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியான கற்றலின் சிறப்பை விழா வெளிப்படுத்தியது. மாணவர்களுக்கு விருந்தினர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பள்ளியின் தலைவர் மோகன் சந்தர், செயலாளர் உமா, முதல்வர் கீதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை