கபடி போட்டியில் கலக்கிய கே.கே.ஐ.டி., அணி வீரர்கள்
கோவை; சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த கபடி போட்டியில், கே.கே.ஐ.டி., அணி முதல் பரிசை தட்டியது.சி.ஐ.டி., கல்லுாரியில் கடந்த, 4 முதல், 6ம் தேதி வரை 'அலுமினி டிராபி' போட்டிகள் நடந்தன. 22 அணிகள் பங்கேற்ற கபடி போட்டியின் அரையிறுதிக்கு, கே.கே.ஐ.டி., ஈரோடு செங்குந்தர் கல்லுாரி, ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரிகள் தகுதிபெற்றன.முதல் அரையிறுதியில், கே.கே.ஐ.டி., அணி, 27-23 என்ற புள்ளி கணக்கில், ராமகிருஷ்ணா கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் ஈரோடு செங்குந்தர் அணி, 25-16 என்ற புள்ளிகளில் சி.ஐ.டி., கல்லுாரி அணியையும் வீழ்த்தின.நிறைவில், கே.கே. ஐ.டி., அணி, ஈரோடு செங்குந்தர் கல்லுாரி, ராமகிருஷ்ணா அணி, சி.ஐ.டி., அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன. ஆண்களுக்கான கோ-கோ போட்டியில், பி.எஸ்.ஜி., டெக்., சி.ஐ.டி., ஜி.சி.டி., ஆகியன முதல் மூன்று இடங்களை வென்றன.கூடைப்பந்து போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பி.எஸ்.ஜி., டெக்., ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, சி.ஐ.டி., கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சந்தோஷ், முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.