பிராண்ட் கோவை அம்பாசடர் விருது பெற்ற கே.எம்.சி.எச்.,
கோவை; கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு(கே.எம்.சி.எச்.,), பிராண்ட் கோவை அம்பாசடர் விருது வழங்கப்பட்டது.கோவை எனும் 'பிராண்டை' தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 'பிராண்ட்' கோவை அம்பாசடர் விருது வழங்கப்படுகிறது. இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளை மற்றும் கோவை விளம்பர சங்கம் சார்பில், இவ்விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், கோவையில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், கே.எம்.சி.எச்., க்கு இந்தாண்டுக்கான விருது வழங்கப்பட்டது. டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவர் தினேஷ், கே.எம்.சி.எச்., குழும தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமியிடம் விருதை வழங்கினார்.டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில்,''கே.எம்.சி.எச்., மருத்துவ குழுவினர், அனைவரது கடுமையான உழைப்பிற்கும், அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும் கிடைத்த, அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். ''கோவை எனும் பிராண்டின் இமேஜை, உலக அரங்கில் மேலும் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம்,'' என்றார்.