முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மாநாடு
கோவை: ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை, தமிழ்நாடு எலும்பியல் சங்கம் மற்றும் இந்திய எலும்பியல் சங்கத்துடன் இணைந்து, 'ரிவிஷன்' முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை தொடர்பான தேசிய மாநாட்டை, ரெசிடன்சி டவர்ஸ் ஹோட்டலில் நடத்தியது. கோவை எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார், தமிழ்நாடு எலும்பியல் சங்க செயலாளர் டாக்டர் திருநாராயண், ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் இயக்குனர் டாக்டர் ரெக்ஸ், தமிழ்நாடு எலும்பியல் சங்க தலைவர் டாக்டர் மணிகண்டன், இணை செயலாளர் டாக்டர் மாரிமுத்து மற்றும் இந்தியா முழுவதும் இருந்து வல்லுனர்கள் பங்கேற்றனர். நிபுணர்கள் கலந்துரையாடல், பயிலரங்கம், ஆராய்ச்சி தரவுகள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள புதிய யுத்திகள், அறுவை சிகிச்சை முறைகள் பற்றி விவாதங்கள் இடம்பெற்றன. டாக்டர் ரெக்ஸ் கூறுகையில், ''எங்கள் மருத்துவமனையில் 10 ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறோம். இம்மாநாடு முதுநிலை மருத்துவ பட்டதாரிகள், இளம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது,'' என்றார்.