உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டூர் குறுமைய சதுரங்க போட்டி

கோட்டூர் குறுமைய சதுரங்க போட்டி

ஆனைமலை; ஆனைமலை அருகே கோட்டூர் குறுமைய அளவிலான சதுரங்க போட்டி, சேத்துமடை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆனைமலை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையான மாணவர்கள் போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். மூத்த உடற்கல்வி ஆசிரியர் தர்மலிங்கம் போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆசிய மாஸ்டர் தடகள வீராங்கனை காயத்ரி, பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் செந்தில்குமார், உடற்கல்வி ஆசிரியர் ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். வால்பாறை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ