உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டூர் குறுமைய தடகளம்; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்

கோட்டூர் குறுமைய தடகளம்; பழனியம்மாள் பள்ளி சாம்பியன்

ஆனைமலை; கோட்டூர் குறுமைய அளவிலான தடகள போட்டிகள், காளியாபுரம் பாரஸ்ட் ஹில் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. பழனியம்மாள் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வெற்றி பெற்றனர். மாணவியர் பிரிவில், 14வயதுக்கு உட்பட்டோருக்கான, 600, 400 மீ., ஓட்டத்தில் முதலிடம், 200 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்து சமீனா தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். வட்டு எறிதல், 600 மீ., ஓட்டம். 4*100 தொடர் ஓட்டத்தில் மாணவியர் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரமிதா, 3,000, 1500 மற்றும் 800 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 3,000, 1,500, 400 மீ. ஓட்டம், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், 100 மீ. தடை தாண்டுதலிலும் வென்றனர். இதுபோன்று, 19வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் மாணவியர் வெற்றி பெற்றனர். மாணவர் பிரிவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான, 100, 200 மீ., மற்றும் நீளம் தாண்டுதலில் ராகுல் இரண்டாமிடம், உயரம் தாண்டுதலில் அஸ்வத் இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், முத்துக்குமார், 3,000 மற்றும், 1500 மீ., ஓட்டத்தில் முதலிடம், சபரி பிரசாந்த் குண்டு எறிதலில் முதலிடம் மற்றும் ஈட்டி எறிதலில் இரண்டாமிடம், ஆதம்சா நீளம் தாண்டுதலில் முதலிடம், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்றனர். அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் சிவக்குமார், தலைமையாசிரியர் சேதுராமன், கே.எம்.ஜி. மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஐயப்பன், இணை உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி