மேலும் செய்திகள்
பெரிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
04-Mar-2025
போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்தில்,யோக வினாயகர் கோவில் உள்ளது. இதன் இரண்டாவது கும்பாபிஷேக விழா கடந்த, 14ல், குரு பிரார்த்தனை, வாஸ்து பூஜை உள்ளிட்டவைகளுடன் துவங்கியது.நேற்று அதிகாலை மூன்றாம் யாகசாலை பூஜை தொடர்ந்து, கலசங்கள் புறப்பாடு நடந்தன. 9:00 மணிக்கு மேல் விமான கோபுரங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், விஷ்ணு, துர்க்கை அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இறுதியாக யோக வினாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தன. கும்பாபிஷேகத்தை சீனிவாச ஐயர், ராமசாமி சாஸ்திரிகள், நடராஜ் சாஸ்திரிகள் மற்றும் அர்ச்சகர் தங்கராஜ் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர்.கும்பாபிஷேகம் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, வினாயகர் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டு சென்றனர். 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
04-Mar-2025