விநாயகர், முருகன், ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கப்பளாங்கரை விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கிணத்துக்கடவு, கப்பளாங்கரையில், விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா, வரும் 28ம் தேதி துவங்குகிறது.அன்று, காலை, 7:30 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி மற்றும் லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி போன்ற நிகழ்சிகள் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, முதலான பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக பூஜை பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 8:00 மணிக்கு, எந்திர ஸ்தாபனம் நடக்கிறது.வரும், 29ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு, விமான கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு, மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 7:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.