உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றித்திருமுக விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

வெற்றித்திருமுக விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் வெற்றித்திருமுக விநாயகர் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா நடந்தது.பொள்ளாச்சி குமரன் நகர் வெற்றித்திருமுக விநாயகர் கோவிலில், கடந்த, 31ம் தேதி முதல், யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இரண்டு நாட்கள் மூன்று கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கடந்த, 2ம் தேதி விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு வெற்றித்திருமுக விநாயகர் விமான கும்பாபிேஷகம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடைபெற்றது. காலை, 10:15 மணிக்கு மகா அபி ேஷகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், காலை, 10:30 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றன.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !