உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா

கருமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்; பழமையான கருமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பிரசித்தி பெற்ற நடுவச்சேரி, சிவாளபுரி அம்மன் துணையோடு, பூலுவபாளையம், கருமலை ஆண்டவர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், இரவு வேதபாராயணமும் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து வேள்விச் சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. காலை 8:30 மணிக்கு கருமலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தச தரிசனமும், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ