உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதிதிராவிடர் ஆணையத்திடம் குறவர் சமுதாயத்தினர் முறையீடு

ஆதிதிராவிடர் ஆணையத்திடம் குறவர் சமுதாயத்தினர் முறையீடு

கோவை: தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் தமிழ்வாணனை, குறவர் சமுதாயத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர். குறவர் ஜாதியில் உள்ள மக்களில், மலைக்குறவன் என்ற பெயர் எஸ்.டி. பட்டியலிலும், குறவன், சித்தனார் என்ற பெயர்கள் எஸ்.சி. பட்டியலிலும், சீர்மரபினர் பட்டியலில் 27 அழைப்பு பெயர்கள் (ஆத்துார் மேல்நாட்டு குறவர், உப்புக்குறவர், தப்பைக்குறவர், இஞ்சிக்குறவர், வதுவார்ப்பட்டி குறவர் உட்பட) எம்.பி.சி. பட்டியலில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இது, அதிகாரிகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி சான்று பெறுவதில், குறவர் இன மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், சீர்மரபினர் பட்டியலில் இருந்து 27 பெயர்களை நீக்கக்கோரி, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் தமிழ்வாணனிடம், குறவர்கள் சமுதாய பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தனர். அப்போது, குறிஞ்சியர் சமூக நீதி பேரவை நிறுவனர் ஜெகநாதன், மாநில தலைவர் செபாஸ்டியன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சுந்தரராஜன், சங்கரன், தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ