மேலும் செய்திகள்
நபார்டு அலுவலகம் திறப்பு
18-Jun-2025
பக்ரீத் ஸ்பெஷல்: மினி கதை புதிய நடைமுறை
07-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
கோவை; உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், புவிசார் குறியீடு பொருட்கள் மற்றும் புதிய வேளாண் தொழில்முனைவோர்களின் வணிக மேம்பாட்டுக்காக, 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், நபார்டு மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் சார்பில், 'குறிஞ்சி மேளா 2025 கண்காட்சி', கோவையில் நடந்தது. புவிசார் குறியீடு பொருட்களுக்கு அங்கீகாரம் மற்றும் செயலாக்கம் குறித்து, விவசாய துறை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, 'புவிசார் குறியீடு சேவை மையம்' அறிமுகப்படுத்தப்பட்டது. நபார்டு வங்கி நிதியுதவியுடன், அவிநாசியப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தமது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை மின் வர்த்தகம் செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.வேளாண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கல்லுாரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகம் பொது மேலாளர் வசீகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Jun-2025
07-Jun-2025
16-Jun-2025