உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரிய தொகுதியும் சிறிய தொகுதியும்

பெரிய தொகுதியும் சிறிய தொகுதியும்

பெரிய தொகுதியும்...

சிறிய தொகுதியும்

கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 4,07,507 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் பெரிய தொகுதியாக இருக்கிறது. 1,72,284 வாக்காளர்களுடன் வால்பாறை சிறிய தொகுதியாக உள்ளது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், கோவை வடக்கில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருந்தனர். 2026 சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். 10.16 லட்சம் இளம் வாக்காளர்கள் 18-19, 20-29, 30-39 என வயது வாரியாக பிரித்து, 120 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தனித்தனியாக கணக்கிடப்பட்டு இருக்கின்றனர். இதில், 40 வயதுக்கு உட்பட்டோராக, 10 லட்சத்து 16 ஆயிரத்து 987 வாக்காளர்கள் இருக்கின்றனர். 40 முதல் 79 வயது வரையிலான பிரிவில், 16 லட்சத்து 25 ஆயிரத்து 304 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டோராக 54,522 வாக்காளர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !