உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லூரி மாணவிக்கு ஆபாச செய்கை காட்டிய வக்கீல் கைது

கல்லூரி மாணவிக்கு ஆபாச செய்கை காட்டிய வக்கீல் கைது

மேட்டுப்பாளையம்: கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து வந்து, ஆபாச செய்கை காட்டிய வக்கீலை, மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசாக், 47; வக்கீல். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி, 20 தனது அண்ணனுடன் சென்று போது, அப்துல் ரசாக் பின் தொடர்ந்து வந்து பாட்டுப்பாடி, ஆபாச செய்கைகள் காட்டி உள்ளார். இதுகுறித்து, கல்லூரி மாணவி மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று அப்துல் ரசாக்கை கைது செய்தனர்.இதே மாணவி, மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரிடம், கடந்த ஆண்டு செப்டம்பரில், இதே வக்கீல் அப்துல் ரசாக் மீது, தன்னிடம் தவறான செய்கை காட்டியதாக கூறி புகார் அளித்தார். அப்போது ரயில்வே போலீசாரும் வழக்கு பதிந்து, அப்துல் ரசாக்கை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை