உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழநி மலையின் மகத்துவம் குறித்து சொற்பொழிவு

பழநி மலையின் மகத்துவம் குறித்து சொற்பொழிவு

சூலுார்; பழநி மலையின் மகத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, வரும், 22ம் தேதி மு.க. புதூரில் நடக்கிறது.முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சொற்பொழிவு நடக்கிறது. வரும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, 'பழநி மலையும் அதன் மகத்துவமும் என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்க உள்ளது.பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் தமிழ்நாயகன், பழநி மலை குறித்தும், அதை சுற்றி உள்ள, பலரும் அறியாத புனித ஸ்தலங்கள் குறித்தும், பழனியாண்டவர் சிலையை வடிவமைத்த, உலகின் முதல் வேதியியல் விஞ்ஞானி போகரின் கண்டுபிடிப்புகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ