சிறுத்தை குட்டி உயிரிழப்பு
வால்பாறை: கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகத்தில், வால்பாறை அருகே மின்பாறை என்ற இடத்தில் ஒன்றரை வயது பெண் சிறுத்தை குட்டி இறந்து கிடப்பது தெரிந்தது. மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகை யில், 'இறந்த சிறுத்தை குட்டி, இரையை வேட்டையாடிய போது உடலில் ஏற்பட்ட காயத்தால், இறந்துள்ளது' என்றனர்.