உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருகலாம் குறள் அமுதம்; படிக்கலாம் வாங்க! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை

பருகலாம் குறள் அமுதம்; படிக்கலாம் வாங்க! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை

கோவை; தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்படும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையால், திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களைக் கொண்டு கோவை அரசு கலைக்கல்லுாரி, சரவணம்பட்டி ரூபி மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி தாய்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் திருக்குறள் பயிற்சிவகுப்புகள், வரும் 7ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்படும். நிறைவுநாளன்று பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் தங்களது தன்விவரக்குறிப்புடன் ஆதார் அட்டை இணைத்து tamilvalar.gmail.comஎன்ற இணைய முகவரி வழியாக அனுப்ப வேண்டும். இதுகுறித்து விபரங்களுக்கு 89034 12685, 90424 31219 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி