உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து சிக்னல் பராமரிக்க நிதி ஒதுக்க கோரி பறந்தது கடிதம்

போக்குவரத்து சிக்னல் பராமரிக்க நிதி ஒதுக்க கோரி பறந்தது கடிதம்

கோவை; 'சாலை விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்து சிக்னல் அமைக்கவும், பராமரிக்கவும் மாவட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' வலியுறுத்தியுள்ளது. இவ்வமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் அனுப்பியுள்ள கடிதம்: சென்னையை தவிர மற்ற நகரங்களில் சிக்னல்கள் அமைக்கவோ, பராமரிக் கவோ நிதி ஒதுக்குவ தில்லை. 2024-25 நிதியாண்டில், சென்னை காவல்துறைக்கு ரூ.11.16 கோடி வழங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் தற்போது வரை, எந்த துறைக்கும் இதற்கான நிதி ஒதுக்கவில்லை. சிக்னல்களுக்கான மின் இணைப்பு, யார் பெயரில் இருக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதலும் இல்லை. கோவை நகர் பகுதியில் மட்டும், தானியங்கி சிக்னல்களுக்கு இணைப்பு கொடுத்த வகையில், ஒரு கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது; இத்தொகையை யார் செலுத்த வேண்டும் என்கிற தகவல் இல்லை. 2017 வரை விளம்பர நிறுவனங்களால், சிக்னல் அமைத்து பராமரிக்கப்பட்டன. வணிக விளம்பரங்களை சிக்னலில் தொங்க விட்டதால், சாலை விபத்துகள் ஏற்பட ஆரம்பித்தன. இது விதிமுறைக்கு எதிரானதென, ஐகோர்ட் சுட்டிக்காட்டியதும், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. சில மாவட்டங்களில் தமிழக அரசின் உத்தரவை மீறி, சிக்னல்களில் விளம்பர பலகைகள் காணப்படுகின்றன; இது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது. சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்வது கவலை அளிக்கிறது. நமது நாட்டில் சாலை விபத்து உயிரிழப்பு ஏற்படுவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ