கோவை - திருப்பதி ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள்
கோவை; கோவை - திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் பொருத்தப்பட்டன.ரயில்வே நிர்வாகம் ரயில்களில், பழைய ஐ.சி.எப்., பெட்டிகளுக்கு பதிலாக பல்வேறு வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி., பெட்டிகளை மாற்றி வருகிறது. இப்பெட்டிகளில் அதிக பயணிகள் பயணிக்க முடியும். எல்.எச்.பி., பெட்டிகள் எடை குறைவானவை என்பதால், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். பராமரிப்பும் எளிது. எளிதில் தீப்பிடிக்காதது. இதனால், அனைத்து ரயில்களிலும் எல்.எச்.பி., பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.கோவையிலிருந்து திருப்பதி செல்லும்(22616) எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் பொருத்தப்பட்டன. இன்று முதல் எல்.எச்.பி., பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.