உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூலி தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள் சிறை 

கூலி தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள் சிறை 

கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள வெள்ளியங்காடு, அன்சூரில் வசித்து வந்தவர் காளி,52; இவரும் அதே ஊரை சேர்ந்த தர்மர்,48, என்பவரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தனர். வேலைக்கு செல்லும் நேரங்களில், தர்மர் வீட்டுக்கு காளி செல்வது வழக்கம். இதனால், தனது மனைவி மீது தர்மருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 2020, டிச., 18ல், தர்மர் வீட்டில் வைத்து, அவரது மனைவி கவிதாவுடன் காளி பேசிக்கொண்டிருந்தார். அப்போது,வீட்டுக்கு சென்ற தர்மர், சந்தேகப்பட்டு இருவர் மீதும் இரும்பு கம்பியால் தாக்கியதில், காளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த கவிதா சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். பில்லுார் டேம் போலீசார் விசாரித்து, தர்மரை கைது செய்து கொலை வழக்கு பதிந்தனர் . அவர் மீது, கோவை எஸ்.சி-எஸ்.டி.,சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தர்மருக்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் பாலசுப்பிரமணி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை