உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழை பெய்யும்

 அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழை பெய்யும்

கோவை: அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. பல்கலை அறிக்கை: தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் அதிக பட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை, 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காற்றின் ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதமாகவும், சராசரியாக காற்று மணிக்கு 4 முதல் 16 கி.மீ., வேகத்தி ல் மேற்கு திசையிலிருந்து வீசும். நடவு செய்த பழ வகை மரங்கள் மரவாசனை பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நீர் பாய்ச்சி பாதுகாக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !