உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது விற்பனை செய்தவர் கைது

மது விற்பனை செய்தவர் கைது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, சட்டவிரோத மத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராகுல்குமார், 25, கூலி தொழிலாளி. இவர், கிணத்துக்கடவு சொக்கனூர் ரோட்டில் உள்ள கல்லுக்குழி, டாஸ்மாக் மதுபான கடை அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் ராகுல்குமாரிடம் விசாரணை செய்ததில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து, 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !