உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள, 14 இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அவ்விடங்களுக்கான ஓட்டுச்சாவடி பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. கோவை மாநகராட்சி 56வது வார்டு, தாளியூர் பேரூராட்சி 3வது வார்டு, பொள்ளாச்சி நகராட்சி 7, 12, 21 ஆகிய மூன்று வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2வது வார்டு, செட்டிபாளையம் பேரூராட்சியில் 4 மற்றும், 10வது வார்டு, தென்கரை பேரூராட்சி 1வது வார்டு, நெ., 4 வீரபாண்டி பேரூராட்சியில் 13வது வார்டு.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2வது வார்டு, வேடபட்டி பேரூராட்சியில் 11வது வார்டு, கோட்டூர் பேரூராட்சியில் 15வது வார்டு, கூடலுார் நகராட்சியில் 23வது வார்டு ஆகிய, 14 வார்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் வெளியீடு செய்தனர். அந்தந்த ஓட்டுச்சாவடி முன், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.