உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகராட்சியின் 3 திட்டங்களுக்கு உள்ளூர் திட்ட குழும நிதி வரலை

 மாநகராட்சியின் 3 திட்டங்களுக்கு உள்ளூர் திட்ட குழும நிதி வரலை

கோவை: கோவை மாநகராட்சியின் மூன்று திட்டங்களுக்கு, உள்ளூர் திட்டக்குழுமம் (எல்.பி.ஏ.,) இன்னும் நிதி ஒதுக்காமல் இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் 40 கோடி ரூபாய்க்கு ரோடு போடுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து உள்ளூர் திட்ட குழும நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 80 சதவீத பணி முடிந்து விட்டது; இன்னும் நிதி ஒதுக்கவில்லை. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதற்கு உள்ளூர் திட்ட குழும நிதி ஒதுக்க வேண்டும். அத்திட்டத்துக்கும் நிதி தரவில்லை. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த ரூ.30 கோடி கேட்டு கருத்துரு அனுப்பினோம். அதற்கும் நிதி தரவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ