மேலும் செய்திகள்
டிராக்டர் டிப்பரில் செம்மண் கடத்தல்
19-Jun-2025
அன்னூர்; அனுமதியின்றி, சட்டவிரோதமாக மண் கடத்திய, லாரி மற்றும் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்னுாரின் வடக்கு பகுதியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அன்னூர் வருவாய் ஆய்வாளர்கள் குருநாதன், செந்தில்குமார் மற்றும் எஸ்.எஸ்.ஐ., கனகராஜ் ஆகியோர் நேற்று மாலை ஆலாங்குட்டையில் வாகன சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கிராவல் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி பிடிபட்டது. மண் தோண்டி டிப்பர் லாரியில் நிரப்பிய பொக்லைன் வாகனமும் பிடிபட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.அன்னூர் போலீசார் டிப்பர் லாரி உரிமையாளர் ஜெயகண்ணன், டிரைவர் நாகார்ஜுன்,20. ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஓட்டுனர் நாகார்ஜுனை கைது செய்து அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
19-Jun-2025