உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட இருவர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பொள்ளாச்சியிலிருந்து நேற்று காலை எம்.சாண்ட் லோடு ஏற்றிய டிப்பர் லாரி வால்பாறை நோக்கி வந்தது. 34வது கொண்டைஊசி வளைவு அருகே லாரி திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இடது பக்கமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வால்பாறையை சேர்ந்த லாரி டிரைவர் பிரேம்குமார், 31, அவருடன் பயணித்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து, காடம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ