உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாமரை சொந்தங்கள் சங்கமம் நிகழ்ச்சி

தாமரை சொந்தங்கள் சங்கமம் நிகழ்ச்சி

போத்தனூர், ; கோவை, மதுக்கரை நகர பா.ஜ. நிர்வாகிகள் குடும்பத்தார் சந்திப்பான, 'தாமரை சொந்தங்கள் சங்கமம்' நிகழ்ச்சி, நேற்று கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.வின் முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடந்தது. புதிய மண்டல் தலைவராக, ராஜ்குமார் பொறுப்பேற்றார். வசந்தராஜன் அவரை முன்மொழிந்தார். நகர முன்னாள் தலைவர் செந்தில் குமார் வழிமொழிந்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவராக பொறுப்பேற்ற ஜான்சனை வாழ்த்தியும், நியமனம் செய்த கட்சி தலைமைக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. பங்கேற்ற சிறுவர், சிறுமியருக்கு குறிப்பாக சிலம்பம் பயின்றோருக்கு, தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மதுக்கரை நகர பூத் கமிட்டி உறுப்பினர்கள், குடும்பத்தார், 700 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ