மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
04-Dec-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி காய்கறி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொள்கின்றனர். இதில் வாழை சாகுபடி அதிகளவில் இடம் பெறுகிறது. இந்நிலையில், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை (ஒரு கிலோ) - 70, நேந்திரன் 25, கதளி - 32, பூவன் - 35, ரஸ்தாளி - 50 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் - 47 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது செவ்வாழை (ஒரு கிலோ) மற்றும் பூவன் - 5, ரஸ்தாளி - 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதே போன்று கதளி 8 ரூபாயும், சாம்பிராணி வகை வாழைத்தார் - 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், 50க்கும் குறைவான வாழைத்தார்கள் மட்டுமே வரத்து இருந்தது. பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அடுத்த வாரம் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது' என்றனர்.
04-Dec-2025