உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளூர் விவசாயிகளுக்கு லூலூ குழுமம் ஆதரவு கரம்

உள்ளூர் விவசாயிகளுக்கு லூலூ குழுமம் ஆதரவு கரம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கணபதிபாளையத்தில் லூலூ குழுமத்தால், வேளாண் உற்பத்தி முன்னெடுப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.மொத்தம், 160 ஏக்கரில், 50 ஏக்கரில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. உயர்தர காய்கறி, பழங்கள் விளைவிப்பதை உறுதிசெய்து, உள்ளூர் விவசாயிகளுக்கு நேரடி ஆதரவை வழங்குவதே திட்டத்தின் குறிக்கோளாகும். வாழை, தென்னை, முருங்கை, வெங்காயம் மற்றும் புடலங்காய் உட்பட காய்கறிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும்.லுாலுா 'ப்பேர்' எக்ஸ்போர்ட்ஸ் பிரிவின் வழியாக, கொள்முதல், உற்பத்தி மற்றும் பேக்கிங் ஆகியவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, ஹைப்பர் மார்க்கெட்ஸ் வழியாக நுகர்வோர்களுக்கு வேளாண் விளைபொருட்கள் விற்கப்படுகிறது.லூலூ குழுமத்தின் உலகளாவிய செயல்பாடுகள் துறையின் இயக்குனர் சலீம், சாகுபடி பயிர்களின் கன்றுகளை நடவு செய்தார்.முதுநிலை வேளாண் ஆலோசகர்களான சங்கரன், கார்த்திகேயன், பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரிவு இயக்குனர் சுல்பிகர் கடாவத், தலைமை செயலாக்க அதிகாரி நஜ்முதீன், இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி ரஜித் ராதாகிருஷணன், ஊடகப் பிரிவுத் தலைவர் ஸ்வராஜ், துபாய் நிறுவனத்தின் கொள்முதல் மேலாளர் சந்தோஷ் மேத்யூ உட்பட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை