வரும் 3ல் சந்திர கிரகணம் கோவில் நடை அடைப்பு
மேட்டுப்பாளையம்: சந்திரகிரகணம் மார்ச் 3ம் தேதி மாலை நடைபெற உள்ளதால், அரங்கநாதர் கோவில் நடை, இரவு 8:00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 3ம் தேதி பந்த சேவை விழா நடத்தப்படுகிறது. அன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தீ பந்தங்களை எடுத்து, காரமடை நகரின் வீதிகளில் வலம் வந்து, கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். மூன்றாம் தேதி மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கோவிலின் சன்னதி நடைகள், மாலை 5:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை மூடப்பட்டிருக்கும். 8:00 மணிக்கு மேல் நடைதிறந்து புண்ணியா வாஜனை முடிந்த பின், இரவு 9:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதே நேரம், கிரகண நேரத்தில் ராஜகோபுரம் நடை திறந்திருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.