மேலும் செய்திகள்
ஐயப்ப சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
13-Dec-2025
வால்பாறை: வால்பாறை, நடுமலை எஸ்டேட்டில் உள்ள மகாராஜா மாடசுவாமி கோவிலில் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, பேச்சியம்மாள், இசக்கியம்மாள் கோவிலின், 51ம் ஆண்டு திருவிழா, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் மேலாளர் டின்சில் ஏற்றினார். திருவிழாவை முன்னிட்டு, சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மாலை, 3:30 மணிக்கு நடுமலை அம்மையப்பன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். அதன்பின் நள்ளிரவு, 12:00 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. வரும், 25ம் தேதி காலை, 5:30 மணிக்கு நெய்வேத்தியமும், 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, 9:30 மணிக்கு சப்பர ஊர்வலம், மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
13-Dec-2025