உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காடு கலெக்டராக மாதவிகுட்டி பொறுப்பேற்பு

பாலக்காடு கலெக்டராக மாதவிகுட்டி பொறுப்பேற்பு

பாலக்காடு; பாலக்காடு மாவட்ட கலெக்டராக மாதவிகுட்டி பொறுப்பேற்றார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட கலெக்டர் பிரியங்கா, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பணியிடம் மாற்றப்பட்டார். இதையடுத்து, புதிய கலெக்டராக மாதவிகுட்டியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாதவிகுட்டி நேற்று பொறுப்பேற்றார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2018ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். சிவில் இன்ஜினியரிங் பட்டம், பொது மேலாண்மை முதுகலை பட்டம் பெற்றுள்ளார். எர்ணாகுளம் உதவி கலெக்டர், திருவனந்தபுரம் துணை கலெக்டர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளர், சுகாதாரத்துறை நிர்வாக இயக்குனர், கேரள தொடர் கல்வி மையம் இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாலக்காடு மாவட்டத்தை, வேளாண், தொழில், பழங்குடியின, சுற்றுலாத்துறைகளில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவேன், என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி