மேலும் செய்திகள்
ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா
09-Jan-2025
போத்தனுார்; கோவைபுதுார் குளத்துபாளையம் மாகாளியம்மன் கோவில் விழா கடந்த, 4ல் கம்பம் நடுதல், அம்மன் அழைத்தலுடன் துவங்கியது. 5ம் தேதி சக்தி கரகம் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு வேண்டுதல் செலுத்துதல் நடந்தன.நேற்று காலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர். மாலை அம்மன் ஊர்வலம், தரிசனமும் நடந்தன. இதையடுத்து மஞ்சள் நீராடல், அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவடைந்தது. இன்று இரவு மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
09-Jan-2025