மேலும் செய்திகள்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
23-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா கடந்த, 31ம் தேதி அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி காலை, முதல் கால யாக பூஜை, யாக சாலை பிரவேசம், அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு அபிேஷகம், விமானங்களுக்கு சிறப்பு பூஜை, நான்காம் வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்படுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூன்று விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. மஹா நிவேதனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பஜனை பாடல்கள், மாலை, 5:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றன. காஞ்சிபுரம் ஆராவமுத தாத்தாச்சாரியார், ஆஞ்சநேய உபவாசகர் சக்கரவர்த்தி, கவுந்தப்பாடி அம்மை உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் ராமநாத சிவாச்சாரியார், ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் தண்டபாணி ஆகியோர் கும்பாபிேஷக விழாவை நடத்தினர். எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்ரீ ஜெய் அனுமான் கேசரிமல் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
23-Oct-2025